பரிசளிப்பு விழாக்கள்

உங்கள் மாணவர் தங்களை வென்றோரென உணரச் செய்வதே ஒரு பயிற்சியாளரின் முக்கிய பங்காகும். நீங்கள் எதிர்பார்க்கும் நன்னடத்தை எது என அவர்களை உணரச் செய்து, அதற்கான வெகுமதியை அளிக்க வேண்டும். வீட்டுப்பாடத்தின் செயல்முறையைப் பார்த்து வெகுமதியளிக்கும் போது, தாங்கள் அந்த வார பாடத்தை எவ்வாறு வாழ்வில் கடைப்பிடித்தனர் என்பதைக் கரிசனையுடன் கவனிக்க வேண்டும். அவர்கள் வருகையும் மனனம் செய்வதும் பயிற்சி. கற்றதைக் கடைபிடித்து வாழுகுவதே உண்மையில் போட்டி. போராட்டத்தில் வெற்றி பெற பாடம் படிப்பது அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும். ஏனெனில் உலகில் போட்டியிடுவது என்பது, அவர்கள் வெற்றி எடுக்கும் இடத்திலேயே உள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒரு கனிபற்றி கற்று முடித்ததும், மாத இறுதியில் பரிசளிப்பு விழா நடத்துவது மிக சிறந்தது. எடுத்துக்காட்டாக ‘அன்பு’ என்பது 5 வார பாடமாகும். 3 வாரம் செயல்முறையில் வென்றோருக்கு வெண்கல பதக்கமும், 4 வாரம் வென்றோருக்கு வெள்ளிப்பதக்கமும் 5 வாரமும் வென்றோருக்கு தங்கப்பதக்கமும் பரிசாகத் தரலாம். முதல் மாதம் பிற கிராமங்கள் நகரங்களின் ஓய்வுநாள் வகுப்புகளின் செயல் எவ்வாறு உள்ளது என்பதையும், ஊழியம் மிகத் தேவையுள்ள பகுதிகளில் உள்ளனவா என்பதையெல்லாம் கவனித்து வீட்டுப்பாடங்களின் தன்மையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

ஆண்டு முழுவதிலும், மாணவரின் திறமையின் வெளிபாட்டைக் கணித்து, அதிக பரிசுகளை அதாவது பெற்றோருக்கும் மிகப்பெரிய வெகுமதி அளிக்கவும். அது ஒரு பதக்கமாகவோ கேடயமாகவோ இருக்கலாம். இவ்வாறு நடத்தப்படும் விழாவினை உங்கள் சபையின் அங்கத்தினர் அனைவரையும் கூட்டி நடத்தினால் அது பாராட்டுக்குரியதாகும்.

Flag banner ChampionsTrophy ChampionsMedals Champions