காட்சி அரங்கம்

உங்கள் சிறுவர்கள் உலகத்துக்குள் செல்லும்போதுதான் உண்மையிலேயே ‘காட்சி அரங்கத்’திற்குள் இருக்கின்றனர். இங்குதான் அவர்கள் தங்கள் பாவ இச்சைகளுடன் மெய்யாகவே போரிடுகின்றனர். எனவே அவர்களது வீடும் பள்ளியுமே அவர்கள் போட்டியும், குத்துச்சண்டை விளையாட்டிடமாகிறது. ஏனெனில் சபையில் நாம் சரியான விடைகளைக் கூறி, வகுப்பில் மாய்மாலம் செய்து கொண்டுள்ளோம். எனவே மனனம் செய்தும், கற்றும் போட்டியில் வென்றுவிட்டதாக எந்த ஒரு மாணவனும் நினைக்க வழிவகுக்காமலிருப்போமாக. அது பயிற்சி. உண்மையான போராட்டம் அவர்கள் வாழ்வின் நடைமுறையில் உள்ளது. வாரந்தோறும் வகுப்பில் கற்றுக் கொள்வதை செயலில் காண்பித்தால் மட்டுமே போட்டியில் வென்றவராவார்.

வீட்டுப்பாடம்

கடந்தவார வீட்டுப்பாடத்தை விளக்கிவிட்டு, எதிர்வரும் வாரத்தின் பாடத்தைக் கொடுக்கவும். இப்பாடங்கள் மாணவர் புத்தகங்களிலும், அட்டைகளிலும் உள்ளன. வீட்டுப்பாடம் செய்து வருவோர் மட்டுமே வெற்றி பெற்றோராகும் வாய்ப்பு பெறுவர் என்பதை வலியுறுத்துங்கள். ஆலயம் வந்து, வசனம் படிப்பதோடு, வெற்றிபெற வேண்டுமானால் அவ்வாறு வாழ்ந்து காட்டியேயாக வேண்டும். உங்கள் வகுப்பை சிறு குழுக்களாகப் பிரித்து பிள்ளைகளின் வீட்டுப் பாடத்தை கண்காணிப்பு செய்ய கூடுதலாகப் பயிற்சியாளரை நியமிக்கவும். (‘சிறு குழுக்கள்’ என்ற பகுதியை வாசிக்கவும்)

வாரம் ஒருமுறை வீட்டுப்பாடத்தைச் செய்துவிட்டால் பாவத்தை வென்றுவிட்டோம் என உறுதி பெறமுடியாது. ஏனெனில் குத்துச் சண்டையில் எதிரிக்கு ஒரு குத்துமட்டும் கொடுத்தால் மட்டும் போதாது. இதை ஒப்பிட்டுக் கூறி, அவர்கள் உண்மையிலேயே வெற்றி பெற வேண்டுமானால், பாவத்துக்கு நிறைய குத்துகள் கொடுக்க வேண்டும். இதை ஊக்குவியுங்கள். ஒவ்வொருவரும் எதிர் வந்த பாவத்திற்கு எத்தனை குத்து கொடுத்தான் என கணக்கிட்டு, மாணவர் போட்டி மனப்பான்மையுடன் போரிட உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் செய்து வந்த வீட்டுப்பாடம் இதற்கு அடையாளமாயிருக்கிறது. குத்துகளின் தன்மையைக் கவர்ச்சிகரமாக வர்ணிக்க கீழ்கண்ட

4 வெவ்வேறு பெயர்களைச் சூட்டலாம். குத்தித்தள்ளு, மடக்கி அடி, குறுக்கே வெட்டு, மேலெழுந்து குத்து.

வருகைக்கான பரிசு அட்டை

அந்தந்த வாரத்திற்குரிய போட்டியினைக் குறித்துள்ள அட்டையை, வருகை அட்டையாகப் பயன்படுத்தவும். அனைத்து வாரங்களும் வருகை தரும்படி மாணவரை உற்சாகப்படுத்தி, அட்டைகளைச் சேகரித்து வையுங்கள். இவைகளைக் குறைந்த செலவில் நகலெடுத்துக் கொள்ளலாம். மனப்பாட வசன விளையாட்டு, பொருத்துக போன்ற விளையாட்டுகளில் இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Match Cards Champions
வருகைக்கான பரிசு அட்டை 1

Only available as a download.

இந்த பொருத்தும் அட்டைகளை ஒவ்வொரு வாரமும் மாணவர் பெற விரும்புவர். ஒவ்வொரு அட்டையின் பின்புறத்திலும் வீட்டுப்பாடம் உள்ளது.

Match Cards Champions
வருகைக்கான பரிசு அட்டை 3 - விரைவில் வெளிவரும

Only available as a download.

இந்த பொருத்தும் அட்டைகளை ஒவ்வொரு வாரமும் மாணவர் பெற விரும்புவர். ஒவ்வொரு அட்டையின் பின்புறத்திலும் வீட்டுப்பாடம் உள்ளது.