பொது மதிப்பீடு

ஆவியின் கனிபற்றி கற்கவுள்ளோர், கனியைக் காண்பதோடன்றி, தங்கள் மாம்சத்தின் பாவங்கள் இந்த ஆவியின் கனியுடன் போராடுவதைக் காண்பார்கள். உங்கள் மாணவர் இவற்றில் வெற்றிபெற உதவுவதே உங்கள் நோக்கமாயிருக்கட்டும். வசனங்களை மனனம் செய்வதும், வேத கதைகளைப் படிப்பதும் போதாது. அனுதின வாழ்வில் ஆவியின் கனி தருவதே முக்கியமாகும்.

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." கலாத்தியர் 5:22-23

பகுதி 1

பாடம் 1

அன்பும் சுயநலமும்
வேதாகமக் கதை : இயேசு சிலுவையில் மரித்தார்
மத்தேயு 27:27-56

மனப்பாட வசனம்

"அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்." 1 யோவான் 3:16

காட்சி அரங்கம்

உங்கள் நண்பர் விரும்பும் விளையாட்டை அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்கள் விரும்பும் வரை விளையாடுங்கள். உங்களுக்கு விருப்பமான விளையாட்டை அவர்களிடம் சொல்ல வேண்டாம். உங்களைப் பற்றி எண்ணாது உண்மையான அன்பை நீங்கள் அவரிடம் காட்டுங்கள். உங்கள் விருப்பங்களை மனதில் கொள்ள வேண்டாம்.

பாடம் 2

அன்பும் குறைகாண்பதும்
வேதாகமக் கதை : உத்திரமும் துரும்பும்
மத்தேயு 7:1-5

மனப்பாட வசனம்

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." மத்தேயு 7:1-2

காட்சி அரங்கம்

பிறரிடம் “மிகவும் நன்றாக செய்தீர்கள்” என்று கூறவும். அல்லது அவர்களிடம் நீங்கள் பார்த்த நற்செயலுக்காக பாராட்டவும். ஒரு சிறு கைக் கண்ணாடியை எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை குறை காண நேரிடும் பொழுது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். மற்றவர்களுடைய குறைகளில் நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று உங்களையே நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாடம் 3

அன்பும் வெறுப்பும்
வேதாகமக் கதை : யூதாஸ் இயேசுவை மறுதலித்தான்
மத்தேயு 26:14-16

மனப்பாட வசனம்

"தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" 1 யோவான் 4:20

காட்சி அரங்கம்

நீங்கள் விரும்பாத ஒருவருக்கு ஒரு நல்ல காரியம் செய்யுங்கள். மற்றவர்கள் ஏமாற்றும் பொழுதோ, குழப்பும் பொழுதோ உங்கள் நாவைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறாதிருங்கள். அல்லது அவர்களைப் பிரச்சனையில் கொண்டு செல்லாதீர்கள்.

பாடம் 4

அன்பும் சுயநீதியும்
வேதாகமக் கதை : நல்ல சமாரியனின் உவமை
லூக்கா 10:25-37

மனப்பாட வசனம்

“அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.” லூக்கா 10:27

காட்சி அரங்கம்

இந்த வாரத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முயற்சி எடுங்கள். அப்படி செய்யாமலிருக்கும் எல்லா காரியங்களையும் தவிர்த்து விடுங்கள். உங்கள் அந்தஸ்தில் இல்லாத ஒருவருக்கு உதவி செய்யுங்கள்.

பாடம் 5

அன்பும் ஆவிக்குரிய மாயையும்
வேதாகமக் கதை : தாவீது ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்
1 சாமுவேல் 16:1-13

மனப்பாட வசனம்

"அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். " 1 கொரி 13:4-7

காட்சி அரங்கம்

அன்பு செலுத்த முற்படும் பொழுது நீங்கள் தவிர்க்க வேண்டிய ஆவிக்குரிய சடங்குகள் ஏதேனும் உண்டா என்று தேவனிடம் கேளுங்கள். உங்கள் அன்பைக் காட்டும் பல செயல்களை இந்த வாரத்தில் செய்யுங்கள். உங்களையே பெருமைப்படுத்திக் கொள்ளாதிருங்கள். உங்கள் தேவையைப் பொருட்படுத்தாது அவர்கள் தேவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு கணக்கு கேட்காதீர்கள்.

பாடம் 6

சந்தோஷமும் பொறாமையும்
வேதாகமக் கதை : பொறாமை கொண்ட மதத் தலைவர்கள்
அப்போஸ்தலர் 5:12-33

மனப்பாட வசனம்

"பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?" 1 கொரி 3:3

காட்சி அரங்கம்

தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய பரிசுகள், பொருட்கள் மற்றும் குடும்பத்திற்காக நன்றி கூறுங்கள். உங்களிடத்தில் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ தேவனிடம் கேளுங்கள். கடந்த காலத்தில் நீங்கள் பொறாமைக் கொண்ட ஒரு நபரைத் தெரிந்தெடுத்து அவருக்கு பரிசு கொடுங்கள். (உங்கள் கடந்த கால பொறாமையைக் குறித்து அவர்களிடம் சொல்ல வேண்டாம்.)

பாடம் 7

சந்தோஷமும் பேராசையும்
வேதாகமக் கதை : ஐசுவரியனான வாலிபன்
மத்தேயு 19:16-30

மனப்பாட வசனம்

“பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.”
லூக்கா 12:15

காட்சி அரங்கம்

சபையில் உள்ள காணிக்கைத் தட்டில் உங்கள் சொந்த பணத்தை தேவனுக்கென்று செலுத்துங்கள். அது யாரிடம் செல்லுகிறது என்று தெரியாதிருந்தும் பரவாயில்லை. உங்கள் பணத்தை மற்றவர்களுக்கு உதவுவதில் பயன்படுத்துங்கள். உங்களிடத்தில் பணம் இல்லை என்றால் உங்களிடத்தில் உள்ள ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து விடுங்கள்.

பாடம் 8

சந்தோஷமும் சுயபரிதாபமும்
வேதாகமக் கதை : யோனாவும் ஆமணக்கு பூச்சியும்
யோனா 4:1-10

மனப்பாட வசனம்

"மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள். " 2 கொரி 4:17-18

காட்சி அரங்கம்

வீடு இல்லாதவர்களைப் பராமரிப்பவர்கள் அல்லது ஏழைகளுக்கு உணவு கொடுப்பவர்களுக்கு உதவுங்கள். அல்லது மருத்துவமனையில் வியாதியாக இருப்பவரை சென்று பாருங்கள். உங்கள் மீது கரிசனைக் கொள்ளாது மற்றவர்கள் மீது அன்பு செலுத்த தேவன் உங்கள் கண்களைத் திறக்கக் கூறுங்கள்.

பாடம் 9

சந்தோஷமும் நன்றியறிதல்
வேதாகமக் கதை : இல்லாமையும் இயேசு குணமாக்கிய 10 குஷ்டரோகிகள்
லூக்கா 17:11-19

மனப்பாட வசனம்

"அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்." சங்கீதம் 100:4

காட்சி அரங்கம்

தினமும் உங்களுக்கு கொடுக்கும் அல்லது உதவி செய்யும் பெற்றோருக்கோ (வேறு ஒரு நபருக்கோ) நன்றி கூறுங்கள். உங்களுக்கு எப்பொழுதும் தேவைப்படுகின்ற ஒன்றை நீங்கள் சில நாட்கள் உபயோகிக்காமல், அது உங்களுக்கு நியாபகக் குறியாக இருக்கவிடுங்கள்.

பாடம் 10

சமாதானமும் கவலையும்
வேதாகமக் கதை : காகங்களால் போஷிக்கப்பட்ட எலியா
1 ராஜாக்கள் 17:1-6

மனப்பாட வசனம்

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்."
மத்தேயு 6:33

காட்சி அரங்கம்

உங்களுக்குத் தேவையான ஒரு பொருளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உணவாகவோ, பஸ்ஸிற்கு தேவையான பணமாகவோ, உடையாகவோ இருக்கலாம். அதற்கு நீங்கள் தேவனை நம்ப கற்றுக் கொள்ளுங்கள்.

பாடம் 11

சமாதானமும் பயமும்
வேதாகமக் கதை : தண்ணீ ரின்மேல் நடந்த பேதுரு
மத்தேயு 14:22-33

மனப்பாட வசனம்

"அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மத்தேயு 17:20

காட்சி அரங்கம்

உங்களால் செய்ய முடியாத, பயத்தைக் கொண்டு வருகிற காரியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உதவி செய்யும்படி கேளுங்கள். அதற்கு பின் அதைச் செய்ய முயற்சியெடுங்கள் (நீங்கள் பேதுருவைப் போன்று மூழ்கினாலும் அந்தக் காரியத்தை செய்ய துவங்கியதே வெற்றி. செய்ய முடியாது என்ற ஒரு செயலைக் குறித்து செய்ய ஆரம்பியுங்கள்).

பாடம் 12

சமாதானமும் முரண்பாடும்
வேதாகமக் கதை : மறு கன்னத்தைத் காண்பி
மத்தேயு 5:38-42

மனப்பாட வசனம்

"கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்." ரோமர் 12:18

காட்சி அரங்கம்

தவறு ஒன்றை செய்ய இந்த வாரத்தில் உங்களுக்கு இடங்கொடுங்கள் (அது தானாகவே நடக்கும்). நீங்கள் ஒன்றும் செய்யாதிருப்பதே உங்கள் வீட்டுப் பாடம்.

பாடம் 13

சமாதானமும் சுயநம்பிக்கையும்
வேதாகமக் கதை : இயேசு 5000 பேரை போஷித்தார்
லூக்கா 9:10-17

மனப்பாட வசனம்

"அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்." 2 கொரி 12:9

காட்சி அரங்கம்

நீங்கள் குறைவுபடுகின்ற பகுதியில் உங்களுக்கு உதவும்படி தேவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அந்தப் பகுதியில் உங்கள் திருச்சபைக்கு உதவ ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசாமலிருப்பீர்களென்றால் இந்த வாரத்தில் அதிகமாக பேசுங்கள். நீங்கள் சத்தமாக பேசுவீர்களென்றால் இந்த வாரத்தில் பேசாதிருங்கள்.