திட்டமிடல்

பாடல்

பாடல்களை சைகையுடன் பாடி உங்கள் வகுப்பைத் தொடங்குங்கள். பாடல்களை எங்கள்
இணையதளத்திலிருந்து எடுத்து வீடியோக்கள் உதவியால் செய்கையை கற்றுக் கொள்ளலாம்.

நாடகம்

ஒவ்வொரு வாரமும் இருவர் பங்கு பெறக்கூடிய நாடகம் ஒன்றை நடிக்கலாம். நாடகப் பாத்திரங்கள் ஞானி வில்லியும் மூடன் பிரெட்டும் (விரும்பினால் பெயரை மாற்றிக் கொள்ளவும்). பாடத்தை முன்னரே வாசித்து, உங்கள் நாடகம் அன்றைய பாடத்துடன் சம்பந்தப்பட்டதா என்பதை உறுதி செய்யுங்கள். இது வேதாகமக் கதை என்பதை மாணவர் இனம் கண்டு கொள்ளட்டும். ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் அதே இருவர் நடிப்பது நலம். ஏனெனில் ஞானி வில்லியும் மூடன் பிரெட்டும் நன்கு அறிமுகமாகி மாணவரைக் கவர்ந்து கொள்வர். அவர்களுக்குரிய நாடக உடையை ஆலய அறையிலே வைத்துச் செல்லட்டும். ஏனெனில் உடைமாற்றும் நேரத்தினை இது குறைக்கும். (எ.காட்டு. ஒரு மூக்குக்கண்ணாடி, தொப்பி)

முக்கிய பாடம்

பாடத்தை அறிமுகப்படுத்தியதும் வேதாகமக் கதைக்குச் செல்லுங்கள். வேதாகமத்தை வாசித்துக் காண்பித்து முழு கதையையும் புரிந்து கொள்ளச் செய்யவும். ஏனெனில் இந்த புத்தகத்தில் கதை முழுவதும் தரப்பட்டிருக்கவில்லை. அதைக் கற்றுக் கொண்டபின், முக்கிய பாடம் நமது வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புள்ளது என்பதை விளக்கவும். பாட முடிவில் மனன வசனத்தை வாசித்து, பிள்ளைகளுடன் சேர்ந்து ஜெபிக்கவும்.

மாணவர் புத்தகம்

ஒவ்வொரு பாடப்பகுதியையும் புத்தகமாகவோ, நகலாகவோ மாணவரிடம் கொடுக்கலாம். அதிலுள்ள புதிர்கள் மாணவரால் புரிவதற்கு அரிதாக இருக்குமானால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏனெனில் ஞாயிறு பள்ளி புத்தகம் புரிவதற்குக் கடினமாயிருப்பதைக் காட்டிலும் கிளர்ச்சியும் ஆர்வமும் அளிப்பதாயிருப்பதே நலம். தங்கள் கையேட்டில் சில பொருட்களை ஒட்டுவதை ஊக்குவியுங்கள். வண்ணம் தீட்டும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கையேட்டில் சிறு பொருட்கள் ஒட்டப்படுகிறது நன்றாயிருக்கும். (எ.கா.) அரிசி, பஞ்சு உருண்டை, குச்சி வடிவ உணவுப் பொருட்கள், அல்லது வர்ணங்கள். மேல் வகுப்பு மாணவர் தங்கள் புத்தகங்களை குறிப்பேடுகளாக பயன்படுத்தலாம். அதில் தங்கள் பயணச் சீட்டுகள், சிறு நாணயங்கள், பறவை இறகுகள் ஆகியவற்றை ஒட்டலாம். தங்கள் வீட்டுப்பாடம் பற்றி நினைவுறுத்த இவை பயன்படுத்தப்படலாம்.

வீட்டுப்பாடம் (காட்சியரங்கு)

ஆலயம் செல்லுவதாலோ, வேதாகமத்தை மனனம் செய்வதாலோ ஒருவரும் வெற்றி வாழ்க்கை பெற முடியாது. வாழ்ந்து காட்டுவதே இன்றியமையாதது. இந்தக் குறிப்பிட்ட வீட்டுப் பாடங்கள்மூலம் வேதாகமத்தை வாழ்ந்து காட்ட மாணவரை ஊக்குவியுங்கள்.

இன்னும் விவரம் அறிய ‘வளையத்திற்குள்’ என்ற பகுதியைப் பார்க்கவும்.

மனப்பாட வசன விளையாட்டு

இப்பகுதியில் உள்ள விளையாட்டுகளெல்லாம் வாரந்தோறும் கற்கும் மனப்பாட வசனத்தை மனதில் வைக்கக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அவர்கள் விரும்பியதைத் தெரிந்தெடுத்து விளையாடலாம். தேவையான உபகரணங்களை முன்னரே ஆயத்தம் செய்து விளையாட வைக்க வேண்டும்.

வினாக்களும் விடைகளும் (மேல் வகுப்பினருக்கு)

இப்பகுதியிலுள்ள வினாக்கள் பாடத்திற்கு மூன்று என, மாணவரை விவாதிக்கத் தூண்டும்படி அமைக்கப்பட்டுள்ளன. இவை 13 - 15 வயதினற்குரியவை. சிறுவரும் ஆர்வம் கொண்டால் கலந்து கொள்ளலாம். மாணவரை யோசிக்கத் தூண்டும்படி கொடுத்துள்ளோம். எனவே, விடைகளை உடனடியாக அவர்கள் முன் வைக்காதபடி கவனம் செலுத்தவும். அந்த முறை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு பகுதியை அதிகமாக விவாதிக்கும் போது, அதிகம் யோசிக்க அது வழிவகுக்கும். இதுவே ஆசிரியரின் சிறந்த வழிமுறை. மாணவர் நன்றாகப் பேசி விவாதித்தால், நீங்கள் சரியாக அவர்களைத் தூண்டியுள்ளீர்கள் என அர்த்தம். விவாத நேரத்தில் ஒருதரப்பினர் விவாதிக்காமல் அமர்ந்திருந்தால் அவர்களை யோசிக்கவும், பேசவும் உற்சாகப்படுத்தி, ஈடுபாடுகொள்ள முயற்சி செய்யுங்கள்.

வருகைக்கான பரிசு அட்டை

அந்தந்த வாரத்திற்குரிய போட்டியினைக் குறித்துள்ள அட்டையை, வருகை அட்டையாகப் பயன்படுத்தவும். அனைத்து வாரங்களும் வருகை தரும்படி மாணவரை உற்சாகப்படுத்தி, அட்டைகளைச் சேகரித்து வையுங்கள். இவைகளைக் குறைந்த செலவில் நகலெடுத்துக் கொள்ளலாம். மனப்பாட வசன விளையாட்டு, பொருத்துக போன்ற விளையாட்டுகளில் இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.