“பாலம்” சின்னம் திட்டமிடுதல்

எளிதான விபிஎஸ்

உங்கள் கைகளில் எளிமையான, எளிதாக திட்டமிடக்கூடிய, எளிதாக செயல்படுத்தக்கூடிய விபிஎஸ் உண்டு. ஒரு தேதியை தேர்வுசெய்துகொண்டு,சில தன்னார்வத் தொண்டர்களை சேர்த்துக்கொண்டு,சில விளம்பர அழைப்பிதழ்களைமக்கள் கூட்டமாக வசிக்கும் இடங்களில் சுற்றி தொங்க விடுங்கள்.இப்பொழுது நீங்கள் செயல்படுத்த தயாராகிவிட்டீர்கள்!
விபிஎஸ்-ல் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய குழுவானபணியாளர்கள் அதில் இருப்பது அதிக வேடிக்கையாக இருக்கும். எனவே அதிகமான மக்களை ஈடுபடுத்தும்படியாக அதிலுள்ள பணியை பிரித்து வித்தியாசமான கடமைகளைஅந்தந்த குழு செய்யும்படியாக செய்திருக்கின்றோம்.

உங்களுடைய விபிஎஸ்-ன் வேலைச் சுமையை பிரிப்பதற்கான சில கருத்துக்கள்:
1 விபிஎஸ் இயக்குநர்
1 பாட்டு நடத்தும் தலைவர்
1 முக்கிய பாடத்தை பிரசிங்கிப்பவர்
2 நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள்(கேப்டனும், ரோபோவும்)
1 வகுப்பு ஒருங்கிணைப்பாளர் (மாணவர்களின் கையேடுகளை பார்வையிடவும், பாடங்களை மறு ஆய்வு செய்யவும்)
1 கைவினை ஒருங்கிணைப்பாளர்
1 சிற்றுண்டி ஒருங்கிணைப்பாளர்
1 விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்
6-10தலைவர்கள்(உங்களுடைய விபிஎஸ்-ல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து ஒவ்வொரு சிறுகுழுவுக்கும் ஒரு தலைவர்).

நாடகம் /குறுநாடகம்நாடகச் சின்னம்

ஒவ்வொருநாளும் கேப்டன் சிறுவர்களை “கேலக்ஸி எக்ஸ்பிரஸ்” விண்கலத்தில் தன்னுடைய துணைவரான ரோபோவுடன் சிறு தொலைவு பயணம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லுவார்.
விண்கலத்திற்கு பொறுப்பாகவும், வார நாட்களில் சிறுவர்கள் ஆவிக்குரிய காரியங்களை பெற்றுக் கொள்ளுவதின் திறமையை கண்காணிக்க வேண்டியிருப்பதாலும், உங்களுடைய கேப்டன் ஒரு பொறுப்பான நபர். அவர் தன்னுடைய ரோபோவை வந்திருப்போருக்கு அறிமுகம் செய்கின்றார். கவர்ச்சியற்ற, சில சமயங்களில் பழுதடைந்துள்ள ரோபோ பேசும்போது ஒழுங்காக வார்த்தைகளைப் பேசாமல் விசித்திரமான சத்தத்தை உண்டாக்கி உளரத்தான் செய்யும். அது தொடர்ந்து நகருவதற்கு அதனுடைய இணைப்புகளுக்கு எண்ணெய் போடவேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாளும் கேப்டனும் ரோபோவும் அந்த நாளுக்குரிய முக்கிய குறிப்பை அறிமுகப்படுத்தி அதைக் கேட்கும் சிறுவர்கள் ஒவ்வொருமுறையும் சொல்ல வேண்டிய பதில்களையும் கூறுவார்கள். சிறுவர்கள் தங்களுடைய சிறு குழுக்களில் கேட்கும் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டையும் கேப்டன் அறிமுகப்படுத்துவார்.
விபிஎஸ்ஸின் ஒவ்வொரு நாள் துவக்கத்திலும் குறுநாடகத்திற்கான யோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் கொண்டு நீங்கள் அந்த நாளையும் முடிக்கலாம் அல்லது கதாபாத்திரங்கள் விளையாட்டுகளில் கலந்து கொள்ளலாம் அல்லது வகுப்புகளைச் சுற்றிவரலாம். கேப்டனையும் ரோபோவையும் அறிந்து கொள்ளுவதில் சிறுவர்கள் அதிக ஆர்வம் கொள்ளுவார்கள்!

செயல்களில் இறங்கு!

ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய ஒரு சொற்றொடரையும், அதற்குரிய பதிலை செயல்களோடும் மாணவர்கள் கற்றுக் கொள்ளுவார்கள். இந்தச் செயல் அதிக முக்கியமானது. ஏனெனில் அப்பொழுதுதான் முக்கியமான பிரசங்க நேரத்தில் மாணவர்கள் சலித்துப் போகமாட்டார்கள். மேலும் அது விபிஎஸ்ஸை விசேஷமானதாக்கும். உங்களுடைய முழு விபிஎஸ் சமயங்களிலும் கேப்டன் அந்த நாளுக்குரிய சொற்றொடரைக் குறிப்பிடும்போது, அதற்கு என்ன பதிலுரைக்க வேண்டுமெனவும், அதனுடன் சேர்ந்த செயல் என்னவென்றும் மாணவர்களுக்குத் தெரிய வேண்டும். கேப்டன் மற்றும் ரோபோவும் சேர்ந்து நடிக்கும் நாடகத்தின் சமயத்திலும் அவர்கள் அதை அறிந்து கொள்ளுவார்கள். மேலும் அந்த நாளின் மற்ற சமயங்களிலும் நீங்கள் அதை உபயோகப்படுத்தலாம்.

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

பாடம் 1

சேனாதிபதி: தேவனைக் கூப்பிடு!

மாணவர்கள்: இந்தப் பாடத்தின்போது, “தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்” என்ற சொற்றொடரை மாணவர்கள் ஒவ்வொரு முறை கேட்கும்போதும், அவர்கள் “ஆண்டவரே எனக்கு உதவும்” என்று பதில் கூறி, தேவனை நோக்கி தங்கள் கைகளை உயர்த்தி குதிப்பார்கள்.

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

பாடம் 2

சேனாதிபதி: தேவனுக்கு பதில் கொடு!

மாணவர்கள்: இந்தப் பாடத்தில் மாணவர்கள் “தேவனுக்குப் பதில் கொடு” என்று கேட்கும் ஒவ்வொரு நேரத்திலும் “ஆம் ஆண்டவரே!” என்று சொல்ல வேண்டும். அப்போது தங்கள் கையை காதில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு “நான் இங்கே இருக்கின்றேன்!” என்று சொல்லும் போது ஒரு போர்ச்சேவகனைப்போல தங்கள் கால்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

பாடம் 3

சேனாதிபதி: தேவனுக்கு கீழ்ப்படி!

மாணவர்கள்: பாடத்தின்போது “தேவனுக்குக் கீழ்ப்படி” என்று சிறுவர்கள் கேட்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் சிறுவர்கள் நிற்கும்போதும், சுற்றி நடக்கும்போதும் இன்னொரு சிறுவனுடன் இருக்கைகளை மாற்றிக் கொள்ளும்போதும் “நான் போய்க் கொண்டிருக்க வேண்டும்” என்று மாணவர்கள் பதில் சொல்லட்டும்

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

பாடம் 4

சேனாதிபதி: தேவனுக்கு காத்திரு!

மாணவர்கள்: ழுhட வேளையில் “தேவனுக்குக் காத்திரு” என்ற சொற்றொடரை கேட்கும் போதெல்லாம் சிறுவர்கள் நான் ஆயத்தம் தான் என்று பதிலளித்து, குதித்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டே “ஆனால் நான் காத்திருக்க வேண்டும்” என்று கூறி, கைகளைக் கோர்த்துக் கொண்டு அமரவும்

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

பாடம் 5

சேனாதிபதி: தேவனை வழிபடு!

மாணவர்கள்:தேவனை வழிபடுங்கள் என்ற சொற்களைப் பாடத்தினூடே கேட்கும் போதெல்லாம் சிறுவர்கள் “நாங்கள் உம்மை வழிபடுகின்றோம்” என்று தங்கள் கரங்களை உயர்த்தி அசைத்துக் கூறுகின்றனர்

விளையாட்டுகள்விளையாட்டுகள்

இந்த நிகழ்ச்சியின் விளையாட்டுகள் பல அணிகளாக பிரிக்கப்பட்ட மொத்த சிறுவர்களும் ஒரு பெரிய குழுவாக உட்கார்ந்த வண்ணம் விளையாடுவதாகும். (நீங்கள் 2 முதல் 4 அணிகள் வைத்துக் கொள்ளலாம்). சிறுமிகளுக்கு எதிராக சிறுவர்கள் விளையாடும்படி பிரிப்பது எளிதாக இருக்கும். ஒவ்வொரு விளையாட்டுக்கும், தங்களுடைய அணியின் சார்பாக சில தன்னார்வ தொண்டர்களை அனுப்ப வேண்டும், மற்றவர்கள் தங்களுடைய இருக்கையில் இருந்த வண்ணம் சத்தம் போட்டும், ஆர்ப்பரித்தும், சிரித்தும் உதவி செய்யலாம். அப்பொ ழு துதா ன் சிறுவர்களுக்கு சலிப்பாக இருக்காது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பல விளையாட்டுக்களை குறுகிய நேரத்திற்குள்ளாக ஒவ்வொரு விளையாட்டிற்கும் தன்னார்வ தொண்டர்களை மாற்றி விளையாட வேண்டும்.

விளையாட்டுக்களில் முன்நிலையில் இருந்து பங்கு கொள்ளும் மாண வ ர் கi ளத் தெரி ந்b தடுக்கும் நோக்கங்க ளில் ஒன்று. விபிஎஸ்- ன் மற்ற செயல்க ளில் சிறப்பாக நடந்து கொ ள்ளு ம் மாணவ ர்க ளை கண்டு பிடிப்பதுதான். இந்த மாணவர்களுக்கு அவர்கள் விளையாட்டுகளில் பங்கு கொள்ளலாம் என்பதை காட்ட ஏதாவது கொடுங்கள். ஒருவேளை அது அவர்களின் கழுத்தைச் சுற்றி அணிந்து கொள்ளுவதாகவோ, தங்களின் கையில் கட்டிக் கொள்ளக் கூடியதோ அல்லது அவர்களது ஆடையின் பையில் வைத்துக் கொள்ளக் கூடிய ஓர் அட்டையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு விளையாட்டிலும், நீங்கள் எவ்வளவு முன்னேற்பாடாக இருக்கின்றீர்களோ அவ்வளவு சிறப்பாக விளையாட்டு அமையும். இந்த விளையாட்டிற்கு நீங்கள் ஆயத்தம் செய்யும்போது, டிவி நிகழ்ச்சிகளில் வரும் “கேம் ஷோ” அல்லது “நிக்கலோடியன்” நிகழ்ச்சிகளை நினைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு தங்கள் முன்னால் அணிந்து கொள்ள சில பளிச்சென்ற நிறத்துடன் கூடிய துணியை தேர்வு செய்யுங்கள். விளையாட்டு நேரத்தில் ஒலிகள் அல்லது இசை இருக்கலாம். மேலும் சில வேடிக்கையான அலங்காரங்களும் செய்யலாம். (கேலக்ஸி எக்ஸ்பிரஸ் சிடியில் விளையாட்டு நேரத்தில் ஒலிக்கக்கூடிய பாட்டுக்களை நாங்கள் உங்களுக்கு அளித்திருக்கின்றோம்). சில உண்மையான வேடிக்கைகளை உங்களுடைய விபிஎஸ்ஸில் சேர்க்க விலையில்லா பொருட்களை உபயோகியுங்கள். ஆயத்தமாகி, மகிழ்ச்சி அடையுங்கள்!

நிகழ்ச்சி நிரல்நிகழ்ச்சி நிரல்

(2 1/2 மணி நேர நிகழ்ச்சி)
பாலம் பெரிய குழு (50 நிமிடம்)

  • பாடல்கள் - (20 நிமிடம்)
  • ஆரம்ப நாடகம் - (10 நிமிடம்)
  • முக்கியமான பாடம் & மனப்பாட வசனம் - (20 நிமிடம்)

சுழலும் நிலையங்கள் in 3 smaller groups divided by ages (1 hour)

  • பயிற்சி வகுப்பு மாணவர் கையேடும், மறு ஆய்வு நிலையமும் (20 நிமிடம்)
  • பொறியியல் கைவினை நிலையம் (20 நிமிடம்)
  • சாப்பாட்டு அறை சிற்றுண்ட நிலையம் & விண்வெளி நடைமுறைப் பயன்பாடு (20 நிமிடம்)

பாலம் விளையாட்டுகள் பெரிய குழு (30 minutes)

முடிவு பாட்டும், அறிவிப்புகளும்- (10 நிமிடம்)

சுழலும் நிலையங்கள்

ஒவ்வொரு நாளின் மத்திய நேரத்தில், சிறுவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, நிலையங்களைச் சுற்றி வரு வா ர்க ள். உ ணவு அறை (சிற்று ண்டி மற்றும் விண் வெ ளி நடைமுறை பய ன்பாடு), பொ றியி யல் (கைவினைகள்), மற்றும் பயிற்சியாளர் வகுப்பு (மாணவர் கையேடுகளும், பாடமும் மறு ஆய்வும்). இந்த நிலையங்களைப் பற்றி அடுத்த பக்கத்தில் இன்னும் அதிகமாக வாசிக்கலாம்.

சிற்றுண்டி நிலையம்சிற்றுண்டி நிலையம்

சிற்றுண்டி நேரத்தில் விண்வெளிக் குறித்து ஆலோசித்து செயல்படுத்துவது.

சிற்றுண்டியை எப்படி தயாரிக்க வேண்டும் என செயல்முறை விளக்கங்களை நீங்கள் இங்கு காணலாம். மாணவர்கள் சிற்றுண்டியை சாப்பிடுவதற்கு முன்பு அதை ஒரு கைவேலையாக மகிழ்ச்சியுடன் அவர்கள் தயாரிப்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு எல்லாவற்றையும், தங்களையும் சுத்தம் செய்ய அவர்களுக்கு நீங்கள் கற்றுத் தரவேண்டிய தருணத்தை மறந்துவிட வேண்டாம்.

விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை சிற்றுண்டி நேரத்தில் கலந்தாலோசிக்கலாமவிண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை சிற்றுண்டி நேரத்தில் கலந்தாலோசிக்கலாம்
சிற்றுண்டி சமயத்தில் மாணவர்களோடு விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டை கலந்தாலோசித்து அது பாடத்தோடும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடும் எவ்வாறு தொடர்புடையதாயிருக்கிறது என்பதையும் கூறுங்கள். சிற்றுண்டி மற்றும் விண்வெளி நடைமுறைப் பயன்பாட்டையும் குறித்த தகவல்கள் உணவு அறை தலைவரின் நோட்டீஸில் காணப்படும்.

கைவேலைபொறியியல்

கைவேலை நிலையம்

கைவேலைக்கு தேவையான பொருட்கள் மற்றும் தகவல்களைப்பற்றிய ஆலோசனையுடன், அதற்கு ஒரு யோசனையையும் இங்கு கிடைக்கும். செலவை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ அவ்வளவு குறைவாக்கி, எல்லா கேலக்ஸி எக்ஸ்பிரஸ் விபிஎஸ் நிகழ்ச்சிகளும் ஒரு கைவேலைக்கு 1 முழு தாளை மட்டுமே பயன்படுத்தப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை இi ணயதளத்தி லிருந்து எடுத்து, கைவேலையைப் பற்றிய தகவல்களை இயக்குநரின் கையேட்டிலும், பொறியியல் தலைவரின் கைப்பிரதியிலும் கண்டு கொள்ளுங்கள். வடிவமைப்பின் நகலையும் நீங்கள் பொறியியல் தலைவரின் நோட்டீஸிலும் காணலாம்.

தகவல் விளையாட்டுதகவல் விளையாட்டு

முக்கிய சொற்றொடரும் மறுமொழியும்

வேதாகமக் கதையின் சில முக்கிய வார்த்தைகளுக்கு சைகை மொழியிலான தகவல்களை இங்கு நீங்கள் கண்டு கொள்ளலாம். இந்த வார்த்தைகளை சைகை மொழியில் கற்றுக் கொடுத்து, கதையை மறு ஆய்வு செய்யுங்கள். அதன்பின் மாணவரின் கையேடுகளை அவர்களுக்கு கொடுத்து புதிரை விடுவிக்க யாராவது ஒருவருக்கு உதவி செய்யுங்கள். இந்த தகவலும் கூட பயிற்சியாளரின் வகுப்புத் தலைவரின் நோட்டீ ஸிலும் இருக்கின்றது.

உதாரணம்: குடும்பம்
பெருவிரலையும், ஆள்காட்டி விரரையும் தொட்டு கைகள் தொடும்படியாக வெளிப்புறமாக வட்டமிடுங்கள்
குடும்பம்