பயிற்சியாளர்

உங்களுக்கு வியப்பளிக்கும் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறோம். நீங்கள் ஞாயிறு பள்ளி ஆசிரியராக இருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்கள் வேலையின் தன்மை மாறி, நீங்கள் பயிற்சி கொடுப்பவர்கள். சரி, இருக்கட்டும்; இந்த ஆண்டில் ‘வெற்றி வீரர்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி விளையாட்டின் மூலம் வேதாகமத்தைக் கற்றுத்தரப் போகிறோம். அன்பான ஆசிரியரே! இப்போதே தொடங்குவோம். ஆசிரியராக அல்ல; பயிற்சி கொடுப்பவராக. உங்கள் வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவனைக் குறித்தும் கரிசனை கொள்ளும்படி, இப்பணி உங்களை ஆர்வமுள்ளவராக்கும். அவர்கள் வெற்றி பெற்றோராய் விளங்க முயற்சி எடுக்கவும் முன்னேறவும் இது வழிவகுக்கும்.

சிறு குழுக்கள்

3 முதல் 7 பேர் அடங்கிய சிறு குழுக்களை உருவாக்குக. குழுவுக்கு ஒரு பயிற்றுநர் பொறுப்பு. பயிற்றுநர் ஒவ்வொரு வாரமும் வகுப்பிற்கு வரத் தேவையில்லை. ஆனால் தங்கள் குழுவின் மாணவரை மேற்பார்வையிட வேண்டும். ஒருவரைத் தலைமை பயிற்றுநராகக் கொள்க. அவர் உங்களை நடத்தி, ஊக்குவிப்பார்.

வாரந்தோறும் தரப்படும் வீட்டுப்பாடங்களைக் கண்காணித்து மேற்பார்வையிட வசதியாயிருக்கும்படி வகுப்பைச் சிறு குழுக்களாகப் பிரிக்கவும். ஓய்வுநாள் பாடசாலைகள் அநேகமாய் ஆலயத்திலேயே நடைபெறும். வாரத்து நாட்களுக்கு வீட்டுப் பாடம் கிடையாது. ஏனெனில் ஞாயிறு நாளில்தான் பாவம் பற்றிய பாடத்தைக் கற்கின்றனர். அதைப் பற்றி அறியாமல் வார நாட்களில் பாவத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது. ஏனெனில் அவர்கள் காட்சியரங்கினுள் நின்று வாரநாட்களில் பாவத்துடன் சண்டையிட வேண்டியதிருக்கிறது. உண்மையைக் கூறப்போனால், அவர்களைச் சரியாகக் கண்காணிப்புச் செய்தாலன்றி அவர்களைக் குறித்து அறிய இயலாது. அவர்கள் ஒரு செயலைச் செய்ததாகக் கூறினால், தயவு செய்து அவர்கள் கூறுவதை நம்ப வேண்டாம். இதில் நீங்கள் கண்டிப்பாயிராவிட்டால் அவர்கள் உங்களிடம் பொய் சொல்லும்படி அவர்களைப் பழக்குவிக்கும். எனவே நான் கருதுவதின்படி, நீங்கள் உங்கள் மாணவரைச் சரியான விதத்தில் பயிற்றுவித்து, பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தை கண்காணித்தால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஒரே ஆண்டுக்குள் அவர்கள் வாழ்வு மாறும். உங்கள் மாணவர் ஆவியின் கனியை மனனம் செய்வோராக அல்ல; கனிதருவோராவார்கள்.

இச்சிறுகுழுக்களின் பயன்பாட்டிற்கென ஒருபுத்தகமும், தலைமை பயிற்சியாளருக்காக ஒருபுத்தகமும் தயாரித்துள்ளோம். பயிற்சியாளரின் புத்தகம் ஒவ்வொரு கனிக்காகவும் மாதம் ஒன்று. தலைமைப் பயிற்சியாளருக்கு மூன்று மாதத்திற்கு ஒன்றாகும்.

Coach Handouts Champions
பயிற்சியாளர் நோட்டீசுகள் 1

Only available as a download.

ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளருக்கு கொடுக்கவும். பகுதி 1 : அன்பு, சந்தோஷம், சமாதானம்

பயிற்சியாளரின் பொறுப்புகள்

பயிற்சியாளர்:

  • 3 - 5 மாணவர்களைப் பயிற்றுவித்தல்
  • வகுப்பு தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னும், முடிந்தபின் 5 நிமிடங்களும் பிள்ளைகளைச் சந்தித்து உரையாடி, அவர்கள் வெற்றிபெற வாக்குவித்தல்.
  • தொலைபேசி, மின் செய்தி மூலம் அவர்கள் செயல்பாட்டை எழுதிக் கொண்டுவர ஞாபகப்படுத்துதல் (செவ்வாய்)
  • இதை இரண்டாம் முறையும் நினைவுபடுத்துதல் (வெள்ளி)
  • மாணவரின் செயல் குறிப்பேட்டை வாசித்து தலைமைப் பயிற்சியாளரிடம் பகிர்ந்து கொள்ளுதல்.

தலைமைப் பயிற்சியாளர் :

  • எல்லா பயிற்சியாளரையும் வகுப்பு தொடங்குமுன் சந்தித்து, உண்மையுடன் பிள்ளைகளின் செயல்பாட்டினைக் கண்காணிக்கக் தூண்டுதல்.
  • செயல் பதிவேட்டைக் குறித்து பயிற்சியாளருக்கு ஞாபகப்படுத்துதல் (செவ்வாய்)
  • செயல் பதிவேடு குறிப்புகளைக் கொண்டுவர நினைவுபடுத்துதல் (வெள்ளி)
  • எல்லா மாணவரும் வீட்டுப்பாடங்கள் செய்து கொண்டு வருகின்றனரா என்பதை கண்காணித்தல்.
  • பயிற்சியாளருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் கூடுகைகளை ஒழுங்கு செய்து நடத்துதல்.

பணி நியமனம்

சிறிய குழுக்களுக்குப் போதுமான அளவு பயிற்சியாளர்கள் தேவைப்படுவதால் அதிகத் தலைவர்களையும், பயிற்சியாளரையும் நியமிப்பது சவாலாகத் தோன்றலாம். எனினும் இது அரிய காரியமல்ல. எளிதில் பயிற்சியாளரைப் பெற சில ஆலோசனைகள் :

  • ஒரே ஒரு மாதம் ஊழியம் செய்யும்படி பயிற்சியாளரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். மாதம் ஒரு ஆவிக்குரிய கனி பற்றிய பாடம் உள்ளது. ஒரு மாத பணி எனக் கூறும் போது பலர் சேவை செய்ய முன்வருவர். வகுப்புகள் கவர்ச்சியாக நடத்தப்படும் போது அவர்கள் பணி தொடர முன்வருவர்.
  • ஆலய வழிபாட்டிற்கு அவர்கள் வழக்கம் போல் வரும்படி கூறுங்கள். ஆனால் மாணவரை சந்திக்கும்படி 10 நிமிடத்திற்கு முன்னதாக வரும்படி கேளுங்கள். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே மாணவரிடம் இருக்க வேண்டும். ஏனைய ஓய்வு நாட்களில் வழக்கமான ஆராதனையில் அவர்கள் பங்கு பெற முடியும்.
  • தொலைபேசியில் மாணவரை அழைப்பதைவிட மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்ள ஆலோசனை கொடுங்கள். பதிவு செய்யப்பட்ட செய்திகளை அவர்களுக்கு விநியோகித்தீர்களானால் அவர்கள் வேலை எளிதாகும். பேஸ் புக் (Facebook) ட்விட்டர், வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்புங்கள்.
  • தங்கள் உபகரணங்களை ஆலய பகுதியில் வைத்து வைக்க வசதி பண்ணிக் கொடுங்கள். விளையாட்டுத் தொப்பிகள், ஊதல்கள், தண்ணீ ர் பாட்டில்களை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள், தூக்கிச் செல்லும் அசௌகரியம் குறையும், ஆலயத்துக்கு வரும்போது அணியும் ஆடையின் மேல் இவற்றை நேரம் செலவிடாமல் அணிய வழிவகுக்கும், சிறிது நேரத்தில் பயிற்சியாளரின் தோற்றத்தில் காணப்படுவர்.
  • மாதந்தோறும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தினால் ஆண்டு முழுவதும் உற்சாகமாகத் தொண்டு புரிய முன்வருவர்.
  • தேவைப்பட்டால் குழுவை 10 அங்கத்தினராக அமைக்கவும். (பேஸ்புக் குறிப்பினால் ஒருவர் பத்து பேரைப் பயிற்றுவிப்பது சிரமமாயிராது)

உற்சாகமூட்ட கூடுகைகள்

தலைமைப் பயிற்சியாளர் தனது உடன் பயிற்சியாளர்களை ஊக்குவிப்பதையே தனது நோக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தவும். ஒரு சிற்றுண்டி அளிக்கலாம்; கூடி ஜெபிக்கலாம்; விளையாட்டுக் குறிப்புகளைக் கூறி கிறிஸ்தவ வாழ்க்கையுடன் அவற்றை ஒப்பிட்டுப் பேசலாம். பாப்கார்னை கொறித்து கொண்டே ஒலிம்பிக் விளையாட்டுகள், ஏனைய சிறந்த விளையாட்டுகளை ஒளி நாடாக்களில் காண்பிக்கலாம். விளையாட்டு வீரன் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுப்பதா அல்லது நாம் ஆத்மீக ஆதாயம் பெற கடினமாக உழைப்பதா எது மேன்மையானது என பயிற்சியாளருடன் விவாதிக்கலாம்.