Galaxy Express Logoகேலக்ஸி எக்ஸ்பிரஸ் முகப்பு

சிறுவர்கள் முக்கியமானவர்கள் நடத்தும் கேலக்ஸி எக்ஸ்பிரஸ் என்ற புதிய விபிஎஸ்-ற்கு அழைக்கிறோம்.

நட்சத்திரங்களுக்கு ஊடே சிறுவர்களை அழைத்துச் சென்று தேவன் எவ்வளவு பெரியவர் என்பதைக் கற்றுக் கொடுங்கள். உங்கள் நேரத்தை செயல்படுத்தி இணையத்தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் எடுத்து போஸ்டர்கள் மூலம் சிறுவர்களை ஈர்த்துக் கொண்டு வந்து வரைபட விளக்கங்கள் மூலம் பாடங்களை ஆயத்தம் செய்து, உங்கள் விபிஎஸ் என்றும் மறக்க இயலாத ஒன்றாகச் செய்யுங்கள்.

“பாலத்தின்” மேல் சிறிது நேரம் கழித்துவிட்டு, சிறுவர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்றபடி வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு, விண்கலத்தைச் சுற்றி வருவார்கள். அதன்பின் அவர்கள் பயிற்சி வகுப்புச் சென்று, தங்களுடைய கையேடுகளில் செய்ய வேண்டியதை செய்து, பாடத்தை மறு ஆய்வு செய்து, கைவேலைகளை வடிவமைத்து உருவாக்கி, சிற்றுண்டிக்காக உணவுச் சாலைக்குச் சென்று, பாடத்திற்கான நடைமுறை பயன்பாட்டைக் கண்டு பிடிப்பார்கள். இந்த சிறிய குழுக்களில் உங்களுடைய மாணவர்கள் ஒருவரையொருவரையும், அவர்களது ஆசிரியர்களையும் அறிந்து கொள்ளுவார்கள். அது வருடம் முழுவதும் நிலைத்திருக்கும் ஒரு புதிய உறவினை அமைத்துக் கொடுக்கும்.

சில வேடிக்கையான விண்வெளி விளையாட்டுகளுக்கு எல்லா சிறுவர்களையும் ஒன்றாக “பாலத்திற்கு” அழைப்பது மிக எளிது. அன்றைய நாளை “கேலக்ஸி எக்ஸ்பிரஸ்”ன் புதிய சிடியிலிருந்து சில பாட்டுகளைப் பாடியும், ஒரு ஜெபம் செய்தும் முடிக்கலாம். மேலும் அடுத்த நாள் விடுமுறை வேதாகமப் பள்ளிக்கு அவர்களை வரும்படி அழைக்க மறக்க வேண்டாம்!

இந்த விடுமுறை வேதாகமப் பள்ளியை நீங்கள் மகிழ்ந்து, அனுபவிப்பீர்கள் என்ற நான் நம்புகின்றேன். உங்களுடைய கற்பனைத் திறனை இதில் பிரயோஜனப்படுத்த இந்த வி.பி.எஸ்.யை இவ்வுலகை விட்டு வெளியே இருக்கும் ஒரு அனுபவமாக மாற்றுவீர்கள் என நம்புகின்றேன்!

சாதனங்கள்

இலவசப் பதிவிறக்கம்!

விபிஎஸ்-ற்கான சாதனங்களை பற்றி அறிய சாதனங்கள் பக்கம் பார்க்கவும்... விபிஎஸ்-ற்கு புத்தகங்களையும், பொருட்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்.

மேலும் பார்க்கவும்.

சின்னங்கள்

தாங்கள் இருக்கும் இடத்தை அலங்கரிப்பதின் மூலம் உங்கள் சிறுவர்களை வான்வெளியில் இருப்பதுபோல் கற்பனை செய்யும்படி ஊக்குவியுங்கள்.

உங்கள் விபிஎஸ்-ற்கு தேவையான சின்னங்களையும், கிராபிக்ஸ்யையும் இணையத்தளத்திலிருந்து எடுங்கள்.

மேலும் பார்க்கவும்.

கைவேலைகள்

சிறுவர் கைவேலைகளை விரும்புவர்!

கைவேலைகள் வகுப்பை கவர்ச் சிகரமாக் குகின் றன. நீங்கள் எந்த நாட்டி லிருப்பி னும் இக்கை வேலைகள் எளிதாகச் செய்யக் கூடியவையே. இவற்றையும் இலவசமாக இணையத்தளத்திலிருந்து பெறலாம்.

மேலும் பார்க்கவும்.