தொடர்புக்குLogo for Children are Important

உங்களிடமிருந்து கேட்க ஆசைப்படுகிறோம்! சிறுவர்களிடையே நீங்கள் செய்யும் பணியில் உங்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம். எங்கள் பொருட்கள் இணையத்தளத்திலிருந்து எடுத்து பயன்படுத்த, இலவசமாக, பிற சபைகளுக்கு விநியோகிக்கலாம். எல்லாம் நிபந்தனையற்றதே.

info@childrenareimportant.com

 

இந்தியா

இந்தியாவின் பல மொழிகளில் ஞாயிறு பள்ளி பாடங்களையும் விபிஎஸ் வகுப்புப் பாடங்களையும் தருவதும் இவ்வாண்டு இந்தியாவில் பணி செய்வதும் உற்சாகமளிக்கின்றன. எங்கள் முதல் விபிஎஸ்-இன் “கேலக்ஸி எக்ஸ்பிரஸ்” ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மொழிகளில் ஞாயிறு பள்ளி பாடங்களையும் மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் இணையத்தளத்திலிருந்து இலவசமாகக் கிடைக்கும்.

இன்னும் அதிக அறிய விரும்பினாலோ, எங்களுடன் இணைய விரும்பினாலோ எங்களைத் தொடர்பு கொள்ளவும். www.childrenareimportant.com

info@childrenareimportant.com

 

விநியோகிப்பவர்

உலகெங்கும் உள்ள சிறுவருக்கான ஊழியத்திற்கு பாடங்களைக் குறைந்த விலையில் தர விரும்புகிறோம். முதலில் நாங்கள் இலவசமாக கொடுத்து வந்தோம். ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடர்ந்து அவ்வாறு செய்ய இயலவில்லை. இப்போ அவற்றைத் தயாரிக்கவும், அனுப்பிவைக்கவும் ஆகும் செலவினைப் பெறுவதற்கு பொருட்களை விற்பனை செய்கிறோம். அவற்றை விநியோகிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். விநியோகம் செய்வதற்கு நிபந்தனை கிடையாது. ஆனால் பணம் உதவி அல்லாது பிற உதவியே செய்யப்படும்.

www.childrenareimportant.com

kristina@childrenareimportant.com

 

லத்தீன் அமெரிக்கா

எங்கள் அமைப்பு மெக்ஸிகோவில் உள்ளது. 2005 முதல் ஸ்பானிஷ் மொழியில் பாடங்களைத் தயாரிக்கிறோம். எங்களது அலுவலகம் மெக்ஸிகோ பட்டணத்தின் அருகில் உள்ளது. 01-800-839-1009 or 01-592-924-9041 pedidos@losninoscuentan.com

எங்கள் பாடங்களைக் கீழ்க்கண்ட நாடுகளுக்கு பதிவிறக்கும் கர்த்தரைத் துதிக்கிறோம்; மெக்ஸிகோ, கொலம்பியா, அர்ஜன்டினா, பெரு, வெனிசூலா, சிலி, குவாதிமாலா, ஈக்வேடார், க்யூபா, பொலிவியா, டொமினிக்கல் ரிப்பப்ளிக், ஹோண்டுராஸ், பராகுவே, நிகராகுவா, எல் சல்வடோர், கோஸ்டா ரிகா, பனாமா, பியூர்டோ ரிகோ, ஸ்பெயின், உருகுவே!

அநேக சபைகள் இணையத்தளத்திலிருந்து எடுத்து அச்சிட்டு வருகின்றனர். மெக்ஸிகோவிலுள்ள எங்கள் அச்சகத்தின் மூலம் வெனிசூலா, குவாதிமாலாவுக்கு அனுப்பி, விநியோகஸ்தர் மூலம் புத்தகங்களை பிற சபைகளுக்கு அனுப்புகிறோம். சில வேளைகளில் அச்சகத்தின் மூலம் நேரடியாகவும் அனுப்பித் தருகிறோம்.

குவாத்தமாலா: 5929-2602 pedidosguate@losninoscuentan.com