உங்களது என்ஜின்களை தொடக்கிடுங்கள்

பைபிளை பொறுத்தவரை, இயேசு கிறிஸ்து உடனான நமது பயணமானது ஒரு செயலற்ற நிகழ்வு அல்ல; அது ஒரு பந்தயம்! நாமும், குழந்தைகளும் இதில் வெற்றி கொள்ள போராட வேண்டும், மேலும் இந்த பந்தயத்தில் வெற்றி கொள்வது பூமியில் நாம் அணிந்து கொள்ளும் அல்லது நமது அலமாரியில் தொலைந்து போகும் ஒரு அழகான கோப்பையை நமக்கு வழங்காது, ஆனால் ஒரு நித்திய வெகுமதியை வழங்கிடும்:

““பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்” 1 கொரிந்தியர் 9: 24-25

நாம் கடினமான அழுத்தத்தோடு நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் வைத்து இயேசு கிறிஸ்துவை பின்பற்றும்போது, நமக்கு ஒரு நித்திய வெகுமானம் காத்திருக்கிறது! இந்த ஆற்றல் பொருந்திய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட VBS ல், இயேசு கிறிஸ்து உடனான நமது வாழ்க்கையை ஒப்புமை செய்ய நாம் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை காணவிருக்கிறோம்.