முகப்பு "வெற்றி வீரர்"

அருமையான ஆசிரியப் பெருமக்களே,
உலககெங்குமுள்ள சிறுவர் மத்தியில் ஊழியம் செய்து கர்த்தரைச் சேவிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் அவர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். நீங்கள் மக்களிடையே திருப்பங்களை உருவாக்கி அவர்களை நித்தியத்திற்குரியோராக மாற்றுகிறீர்கள்.

உங்களுக்கு வியப்பளிக்கும் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறோம். நீங்கள் ஞாயிறு பள்ளி ஆசிரியராக இருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்கள் வேலையின் தன்மை மாறி, நீங்கள் பயிற்சி கொடுப்பவர்கள். சரி, இருக்கட்டும்; இந்த ஆண்டில் ‘குத்துச் சண்டை’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி விளையாட்டின் மூலம் வேதாகமத்தைக் கற்றுத்தரப் போகிறோம். அன்பான ஆசிரியரே! இப்போதே தொடங்குவோம். ஆசிரியராக அல்ல; பயிற்சி கொடுப்பவராக. உங்கள் வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவனைக் குறித்தும் கரிசனை கொள்ளும்படி, இப்பணி உங்களை ஆர்வமுள்ளவராக்கும். அவர்கள் வெற்றி பெற்றோராய் விளங்க முயற்சி எடுக்கவும் முன்னேறவும் இது வழிவகுக்கும்.

ஆவியின் கனியைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். கனிகளைப் பெறுவது எப்படி என்பதோடு, ஆவியின் கனிக்கு எதிராகப் போராடும் அநேக மாமிச போர்கள் பற்றியும் கற்றுக்கொள்ளப் போகிறோம். வெற்றி வீரராக்குவதே உங்கள் நோக்கம். வசனங்களை மனனம் செய்வதும், வேதாகமக் கதைகளைப் படிப்பது மட்டுமே போதுமானது என்றல்ல; தங்கள் அனுதின வாழ்வில் ஆவியின் கனியை நடைமுறைப்படுத்துவதே தேவையான ஒன்றாகும்.

உங்கள் ஞாயிறு பள்ளி மாணவரிடம் ‘வெற்றி வீரர்’ என்னும் மையக் கருத்தை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள் என்பதை மனதிற்கொள்வோம். அதன் அடிப்படையில் பாவத்துக்கு எதிராகப் போராடும் போதும் கர்த்தரைப்பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் போதும் அவர்கள் செயல்படுகின்றனர். எனவே உங்கள் சபை பயிற்சி மையமாகிறது.

உங்கள் சிறுவர்கள் உலகத்துக்குள் செல்லும்போதுதான் உண்மையிலேயே ‘காட்சி அரங்கத்’திற்குள் இருக்கின்றனர். இங்குதான் அவர்கள் தங்கள் பாவ இச்சைகளுடன் மெய்யாகவே போரிடுகின்றனர். எனவே அவர்களது வீடும் பள்ளியுமே அவர்கள் போட்டியும், குத்துச்சண்டை விளையாட்டிடமாகிறது. ஏனெனில் சபையில் நாம் சரியான விடைகளைக் கூறி, வகுப்பில் மாய்மாலம் செய்து கொண்டுள்ளோம். எனவே மனனம் செய்தும், கற்றும் போட்டியில் வென்றுவிட்டதாக எந்த ஒரு மாணவனும் நினைக்க வழிவகுக்காமலிருப்போமாக. அது பயிற்சி. உண்மையான போராட்டம். அவர்கள் வாழ்வின் நடைமுறையில் உள்ளது. வாரந்தோறும் வகுப்பில் கற்றுக் கொள்வதை செயலில் காண்பித்தால் மட்டுமே போட்டியில் வென்றவராவார்.

அவர்கள் வெற்றிபெறும்போது அவர்களை ஊக்குவித்து பரிசளிப்பதே உங்களது இறுதி வேலை. எனவே வெகுமதிகளைக் கொடுக்க ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு அன்பான தழுவுதல் அல்லது சிறப்பான உற்சாகமூட்டும் ஒரு வார்த்தையாலே ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் பாராட்டைத் தெரிவியுங்கள். பயிற்சி கொடுப்பவராக அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டே உங்களை மகிழ்விக்கும் பரிசாகும்.

ஒரு பயிற்சியாளராக அதற்கேற்ற ஆடை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் அறையை உடற்பயிற்சிக் கூடமாக அலங்கரித்து விடுங்கள். மேலும் பரிசளிப்பு விழாக்களையும் நடத்துங்கள். விளையாட்டில் வெற்றி கிட்டுவது போல வாழ்வில் ஆவியின் கனி கிடைக்கும்; வெற்றி வந்தடையும். பிறரை விட கடினமாக உழைப்போர் போட்டியில் வெற்றி பெறுவது போல இதிலும் வெற்றியடைய முடியும். உங்கள் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அவர்களைத் தூண்ட முடியும். எவரும் செய்யாததை அவர்கள் செய்வார்கள் என நம்புங்கள். அவர்கள் வாழ்க்கையில் கர்த்தர் அற்புதங்களை நிகழ்த்துவதை கவனியுங்கள்.

ஆவியின் கனி பெறும்படி பயிற்சி அளிப்பதை ஒரு அறைகூவலாக எடுத்து, செயல் புரிய கர்த்தராகிய ஆண்டவர் உங்களை ஊக்கப்படுத்தவாராக. ஞாயிறு பள்ளி ஆசிரியர் என்பதைத் தாண்டி, உங்கள் மாணவரின் வாழ்வில் உண்மையான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட ஜெபிக்கிறோம்.

பொருட்கள்

இலவசமாக பதிவிறக்கம் செய்!

பொருட்கள் பக்கத்தில் எங்களிடம் உள்ள பொருட்களின் பட்டியல் உள்ளது. அங்கிருந்து இந்த ஞாயிறு பள்ளிக்கு தேவையான புத்தகங்களையும் பொருட்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் பார்க்க

சின்னங்கள்

தாங்கள் இருக்கும் இடத்தை அலங்கரிப்பதின்

உங்கள் ஞாயிறு பள்ளி-ற்கு தேவையான சின்னங்களையும், கிராபிக்ஸ்யையும் இணையத்தளத்திலிருந்து எடுங்கள்.

மேலும் பார்க்க

கைவேலைகள்

சிறுவர் கைவேலைகளை விரும்புவர்!

கைவேலைகள் வகுப்பை கவர்ச் சிகரமாக் குகின் றன. நீங்கள் எந்த நாட்டி லிருப்பி னும் இக்கை வேலைகள் எளிதாகச் செய்யக் கூடியவையே. இவற்றையும் இலவசமாக இணையத்தளத்திலிருந்து பெறலாம்.

மேலும் பார்க்க