தொடர்பு கொள்ள

Children are Importantநாங்கள் யார்?

அமைப்பு உங்களை வரவேற்கின்றது. இணையத்தளத்திலிருந்து இலவசசபைகளுடன் இணைந்த சபை சார்பற்ற “சிறுவர்கள் முக்கியமானவர்கள்” என்ற அமைப்பு 2005இல் தொடங்கப்பட்டது. பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகளாவிய சிறுவர் ஊழியத்தைச் செய்கிறோம்.

மற்ற பல அமைப்புகளைவிட இரு வேற்றுமைகள் இவ்வூழியத்தில் உள்ளன. முதலாவது எங்கள் பாடங்களை இணையத்தளத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அச்சிடப்பட்டவற்றை விலை கொடுத்தும் வாங்கலாம். நகலெடுப்பதில் தடையில்லை. இரண்டாவதாக ஒருமுறை கற்பிக்கப்பட்டவற்றை மறுபடியும் பாடத்திட்டத்தில் கொண்டு வருவதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிய ஓய்வுநாள் மற்றும் விபிஎஸ் பாடத் திட்டங்களை புதிதாகவே தயாரிக்கிறோம்.

மெக்ஸிகோ பட்டணத்திலிருந்து ஒருமணி நேர பயண தூரத்தில் எங்கள் அமைப்பு உள்ளன. ‘Los Ninos Cuentan’ என்ற ஊழியத்தின் பெயரில் லத்தீன் அமெரிக்காவுக்கு பாட பகுதிகளை ஸ்பானிஷ் மொழியில் அனுப்புகிறோம். 2014 இல் உலகின் பல பகுதிகளின் சிறுவர்களை சந்திக்க எங்கள் தரிசனத்தை விரிவுபடுத்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளோம். 2015 இல் போர்த்துக்கீஸ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் பாடங்களை மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறோம். எங்களிடம் 20 உடன் ஊழியர் உள்ளனர். அவர்கள் எங்களுடனிருந்தும், வெளியிலிருந்தும் பாடங்களைத் தயாரித்து, மொழியாக்கம் செய்து அச்சிட்டு மற்றும் விற்பனையில் உதவுகின்றனர். சகோதர சகோதரிகளாக உங்களுடன் ஒரு குழுவாய் இயங்கி உங்களுக்கு உதவ உழைக்கிறோம்.

நீங்கள் மாற்றங்களை உருவாக்க இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

தொடர்புக்கு

Otumba, Mexico State (Near Mexico City)
Country code: (52)

592-924-9041
info@childrenareimportant.com

Our print shopஎங்கள் ஊழியம்

உலகமெங்கிலுமுள்ள திருச்சபைகள் அடுத்த தலைமுறையினரை சந்திப்பதற்கு ஏற்ற வசதியற்றிருக்கின்றனர். எங்கள் பாடங்கள் இணையதளத்தினின்று இலவசமாக எடுத்துக் கொள்ளப்படவும், நகல் எடுக்கப்படவும், பயன்படுத்தப்படவும், பிறருக்கு அளிக்கப்படவும் கூடியது. ஆம், அவை முற்றிலும் இலவசமே!

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புது பாடங்களை எழுதி தயாரிக்கிறோம். எனவே எதிர்காலம் பற்றி எண்ணிக் கொண்டிராமல், இப்போதுள்ளவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அடுத்த ஆண்டும் முற்றிலும் புதிய பாடத் திட்டங்களை நீங்கள் பெறலாம்! எளிதாக நகல் எடுக்கக்கூடிய சித்திரங்களும் உண்டு. 13 வாரத்திற்கு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டதால் ஒவ்வொரு வாரமும் இணையத்தளத்திலிருந்து எடுக்க தேவையில்லை. பின்வரும் 3 மாத பாடங்களும், ஆசிரியர் கையேடும், மாணவர் கையேடும் சேர்த்தே இணையதளத்திலிருந்து எடுக்கலாம்.

ஒவ்வொரு நாளும் 1000 பேர் எங்கள் இணையதளத்தை சந்தித்து 28 நாடுகளிலிருந்து நாடோறும் சராசரியாக 10 கீகாபைட் உபயோகிக்கின்றனர். அதாவது தினமும் 700 புத்தகங்கள், பதிவிறக்கம் செய்யப்படுகின்றன! எனவே சென்ற ஆண்டில் 1.5 மில்லியன் சிறுவர்கள் எங்கள் ஞாயிறு பாடசாலை விபிஎஸ் பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும்!

தேவை மிகுதி என்பதாலும், அச்சிடும் செலவு அதிகம் என்பதாலும் மெக்ஸிகோவில் ஒரு அச்சுக்கூடம் வைத்துள்ளோம். ஸ்பானிஷ் மொழியில் அச்சிடப்பட்ட புத்தகத்தை பணத்திற்கே விற்பனை செய்கிறோம். பணம் சம்பாதிப்பதற்கல்ல, எப்படியாயினும் அடுத்த தலைமுறையினரை கிறிஸ்துவிற்காக ஆதாயம் செய்யப்பட வேண்டும். 2014 இல் 2500 திருச்சபைகளுக்கு புத்தகங்கள் அனுப்பினோம். இவை 1,50,000 சிறுவர்களுக்குப் பயன் உள்ளதாயிருந்தது. அவ்வாறு இந்தியாவுக்கும் அனுப்புவோமென நம்புகிறோம்.

எங்களது இரண்டாவது தரிசனம் ஆசிரியப் பயிற்சி ஆகும். அவர்களுக்கு ஊக்கமளித்து கற்பிக்க ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு பாடத்திட்டங்கள் கொடுத்து உண்மையான ஊழியம் செய்ய உற்சாகப்படுத்துகிறோம். கடைசி வரைக்கும் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். ஞாயிறு பாடசாலை, விபிஎஸ் தொடர்ந்து நடத்துவது, நிதி திரட்டுவது இவையனைத்தும் கடினம் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இவ்வூழியத்தை விட்டுச் செல்வது எளிதாகப் படலாம். ஆனால் சிறுவர் வாழ்வில் கனிகளைக் காணும்போது உழைப்பின் பலனை அனுபவிக்கலாம். ஊக்கமளிக்கும் செய்திகள், பயிற்சி ஒலிநாடாக்கள், படங்கள், நேரடி கூடுகைகள், இவற்றின் மூலம் பயிற்சி பெறுவோரை ஊக்குவிக்கிறோம். தற்போது பயிற்சிக்கானவை ஸ்பானிஷ் மொழியில் உள்ளன. இந்தியாவிற்கும் விரைவில் அவற்றை தயாரிப்போம்.

உங்களுக்குத் தேவையான பொருட்கள் இங்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். ChildrenAreImportant.com அமைப்பு உங்களை வரவேற்கிறது!