Logo துப்பறிவாளர்கள்

முகப்பு துப்பறிவாளர்கள்

உங்கள் பூதக் கண்ணாடியையும் குறியீடு மாற்றியையும் எடுத்துக்கொள்ளவும். ஏனெனில்...

இது தேவனுடைய வார்த்தைக்குள்ளாகக்... கடந்து செல்லும் நேரம்!

பல்லாண்டுகளுக்குமுன் இந்த ஊழியத்தைத் தொடங்கும்போது எழுதிய ஞாயிறு பாடத்திட்டத்தை திரும்ப எழுதி புதுப்பிப்பது மிகவும் சிலிர்க்கச் செய்வதாயுள்ளது. மின் வசதியோ, மரங்களோ இல்லாத உப்புத்துகள் படிந்த மெக்ஸிகோவின் சொனோரா என்ற இடத்தில் அமைந்த எங்கள் Trailer வீட்டில் நாங்கள் வசித்த முதல் ஆண்டு அது. ஆனால் அங்குதான் இந்தப் பாடப்பகுதி உருவானது. பாடத்தொகுப்பின் கடைசிப் பகுதியை நான் எழுதி முடிக்கும்போது, சிறுவருக்குள் நடைபெறும் ஊழியத்திற்கான பாடங்களைத் தொடர்ந்து எழுதும்படி தேவன் பேசினார். கிறிஸ்துவின் அங்கத்தினருக்கு குறைந்த விலையில் பாடப்பகுதிகளை அளித்து வரும் தலைமுறையினர் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவைப் பின்பற்றுவோராயிருக்கச் செய்வதே எனது ஊழிய அழைப்பின் நோக்கமாகும். முந்தின பாடப்பகுதிகளினின்று சற்று வித்தியாசமாக இதை தயாரித்துள்ளோம். சில புதிர்கள் கைவேலைகளுண்டு. அத்துடன், முதன்முறையாகச் சிறுவர்களுக்கு வியப்பளிக்கும்படியாக வாரத்திற்குரிய இரகசிய செய்தியும் குறி விலக்கியும் இணைக்கப்பட்டுள்ளது. முப்பது சபைகளில் தொடங்கப்பட்ட இவ்வூழியம் நூறாக வளர்ந்து, தற்போது ஆயிரமாக உலகெங்கும் பரந்து விரிந்துள்ளது. இதற்கென என்னை அழைத்து உற்சாகப்படுத்திய தேவனைத் துதிக்கிறேன். மேலும் என்னில் வைத்த அழைப்பிற்கு என்னைக் கீழ்ப்படிய வைத்த ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.

மத்தேயு நற்செய்தி நூலில் கூறப்பட்டுள்ள உவமைகள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவை. ஒரு வகையில் எங்கள் பாடங்கள் மிக எளிமையாயிருப்பினும், இயேசு கூறின உவமைகள் அத்தனை எளிதானவையன்று. தம்மிடம் வந்த கூட்டத்தினருக்கு இவ்வுவமைகளை இயேசு கூறி, அவற்றின் விளக்கங்களை அவர்களாகவே விளங்கிக் கொள்ளும்படி விட்டுவிட்டார்; தமது சீஷருக்கோ அவற்றை விளக்கி காண்பித்தார்.

ஆசிரியர்களாகிய நீங்கள் உங்கள் மாணவர்களே கற்பனை செய்து அவர்களாகவே உண்மைகளை ஆராய்ந்து அறியவும் ஊக்குவிக்கப் போகிறீர்கள். இந்த 13 வாரங்களுக்குள் ஒவ்வொரு உவமை மூலமும் இயேசு எதை வலியுறுத்தினார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள். எவ்வளவுக்கதிகமாக மாணவர் தாங்களாகவே கருத்தைக் கண்டுபிடிக்க அவர்களைத் தூண்டுவீர்களோ அவ்வளவாக அவர்கள் ஒவ்வொரு பாடத்தின் மூலமும் அறிவைப் பெற்றுக்கொள்வார்கள்; விரைவிலேயே பாடத்திலுள்ள இரகசிய செய்தியை விளங்கிக்கொள்வார்கள். ‘தேவனுடைய ராஜ்யம்...

In your hearts!

உள்ளது’ என்பதே அச்செய்தியாகும்.

பொருட்கள்

இலவசமாக பதிவிறக்கம் செய்!

பொருட்கள் பக்கத்தில் எங்களிடம் உள்ள பொருட்களின் பட்டியல் உள்ளது. அங்கிருந்து இந்த ஞாயிறு பள்ளிக்கு தேவையான புத்தகங்களையும் பொருட்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் பார்க்க

குறிவிலக்குகுறிவிலக்கு

ஷீஷ...! மாணவர் புத்தகங்களில் இரகசியத் தகவல்கள் உள்ளன.

அதனைக் கண்டுபிடிக்க குறி விலக்கி தேவை.

மேலும் பார்க்க

திட்டமிடுதல்திட்டமிடுதல்

உங்கள் வகுப்பறையை விளையாட்டுகள்

கைவேலைகள், இரகசிய தகவல்கள், ஸ்டிக்கர்கள் கொண்டு திட்டமிடுங்கள்.

மேலும் பார்க்க