சிபிஐ: குழந்தைகள் பைபிள் விசாரணை

நீங்கள் உங்கள் தேவாலயம், பகுதி அல்லது சமூகத்திலுள்ள குழந்தைகளுக்கு மற்றுமொரு முழுவருட ஞாயிறு பள்ளி வகுப்புகள் அல்லது பைபிள் பயிற்சியை தர உதவுவதில் நாங்கள் "குழந்தைகள் முக்கியமானவர்கள்" பிரிவின்கீழ் மகிழ்ச்சிகொள்கிறோம். இந்த திட்டத்தில், உங்கள் மாணவர்கள் தங்களை சிறப்பு முகவர்கள் அல்லது துப்பறிவாளர்கள் என்று எண்ணிக்கொண்டு, ஒவ்வொரு வாரமும் ஒரு வழக்கை கொடுத்து தீர்வு செய்ய வலியுறுத்தப்படுவர். தொலைக்காட்சி நிகழ்ச்சியான "சிஎஸ்ஐ" அல்லது "குற்ற காட்சி விசாரணை" போல் உங்கள் மாணவர்களே காவல் துப்பறிவாளர்களாகவும், அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் செயல்பட்டு பரிசோதனை மற்றும் புகைப்பட படப்பிடிப்பை ஒவ்வொரு வழக்கை கையாளும்போதும் நடத்துவர். உங்களது படைப்பாற்றல் கொண்டு உங்களது தேவாலய வகுப்பறையை அறிவியல் கூடமாகவும் மற்றும் உங்கள் ஆசிரியர்களை அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், காவல் துப்பறிவாளர்களாகவும் உடையணியச் செய்யுங்கள்.